Thursday, June 4, 2026
Home > Cinema > மழைல அந்த சீன்!! உள்ள ஒன்னும் போடல !! அப்பட்டமாக ! ரஜினியால என் மானம் தப்பிச்சுச்சு !! இத்தனை ஆண்டுகளுக்கு பின் சொன்ன நடிகை!!

மழைல அந்த சீன்!! உள்ள ஒன்னும் போடல !! அப்பட்டமாக ! ரஜினியால என் மானம் தப்பிச்சுச்சு !! இத்தனை ஆண்டுகளுக்கு பின் சொன்ன நடிகை!!

பிரபல நடிகை ஷோபனா இவர் 80 களில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வந்தார். தமிழ் , தெலுங்கு , மலையாளம் என ஆண்டுக்கு 15-20 படங்களில் நடித்து உச்சத்தில் இருந்தார் ஷோபனா .

1970 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த நடிகை ஷோபனா அடிப்படையில் ஒரு பரதநாட்டிய கலைஞர். தமிழ் தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , ஹிந்தி என பல மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைத்து சிவா மற்றும் தளபதி ஆகிய படங்களில் நடித்தார் . அதிலும் தளபதி திரைப்படம் மிகப்பெரிய பிலாக்பஸ்டர் படமாக மாறி இன்றுவரை எவர் கிரீன் படமாக உள்ளது.

80 கள் தான் ரஜினிகாந்த் என்ற நடிகர் சூப்பர் ஸ்டார்ராக மார காரணமான பல திரைப்படங்கள் வெளியானது. அப்படி 1989 ஆம் ஆண்டு வெளியான சிவா படத்தின் படப்பிடிப்பில் தனக்கு நடந்த சங்கடமான அனுபவத்தை தற்போது பகிர்ந்துள்ளார் நடிகர் சோபனா .

மேலும் அதை அப்போது ரஜினியிடம் யாரிடம் இதை பற்றி சொல்ல வேண்டாம் என்று கூறியதாகவும் . இன்று வரை ரஜினிகாந்த் அதை காப்பாற்றி வருவதாகவும் கூறினார்.

சிவா படத்தில் நடிக்கும்போது ஷோபனாவுக்கு வயது 18 தான். அந்த படத்தில் படத்தில் இரு விழியின் வழியே என்ற ஒரு பாடல் இடம் பெற்று இருக்கும் .அந்தப் பாடல் மழை நேரத்தில் எடுக்கப்பட்டதை போல வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்தப் பாடலில் ரஜினிக்கும் ஷோபனாவிற்கும் வெள்ளை நிற ஆடையே கொடுத்திருப்பார்கள்.

ஆனால் இதைப்பற்றி எதுவுமே ஷோபனாவிற்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லையாம். ஆடை உதவியாளர் வெள்ளை நிற சேலையை ஷோபனாவிடம் நீட்ட அதைப் பார்த்ததும் ஷோபனா ஷாக் ஆகிவிட்டாராம். ஏனெனில் அதற்கு வேண்டிய உள்ளாடைகள் எதுவுமே ஷோபனா எடுத்துக்கொண்டு வரவில்லை என்பதுதான். வெள்ளை நிற சேலை மற்றும் உள்பாவாடை எதுவும் இல்லாமல் எப்படி மழை சீனில் நடிப்பது என தவித்துக் கொண்டு இருந்தாராம் ஷோபனா.

ஒரு வேலை அறையில் போய் எடுத்துக்கொண்டு வந்தாலும் அன்றைய படப்பிடிப்பு ரத்தாகிவிடும் என்ற காரணத்தினால் யோசித்துக் கொண்டிருந்த ஷோபனா செட்டில் இருந்த ஒரு டேபிளில் வெள்ளை நிற பிளாஸ்டிக் கவர் விரித்து வைத்திருந்தார்களாம். அந்த வெள்ளை நிறக் கவரை உள் பாவாடை ஆக கட்டிக்கொண்டு மேலே சேலை அணிந்து கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம்.

அந்தப் பாடல் காட்சியில் ஒரு சீனில் ரஜினி ஷோபனாவை கட்டி அணைக்கும் விதமாக ஓரு காட்சி படமாக்கும் போது சலசலவென சத்தம் கேட்டதாம். அதைக் கேட்ட ரஜினிக்கு திடீர் ஷாக் ஆகிவிட்டதாம் .உடனே ஷோபனா விவரத்தைச் சொல்ல யாரிடமும் இதை சொல்லாதீர்கள் என்றும் வேண்டுகோளாக வைத்தாராம். ரஜினியும் இந்த விஷயத்தை பற்றி யாரிடமும் சொல்லவில்லையாம் இந்த நீண்ட நாள் ரகசியத்தை ஒரு பேட்டியின் மூலம் ஷோபனா தெரிவித்தார்.