Thursday, May 14, 2026
Home > Cinema > அக்கா.. ஒரு படத்துல நடிக்கணும் வாங்க-ன்னு கூப்டாங்க.. ஆனால்.. போனதுக்கு அப்புறம் !! 20 வயசுல இது தேவையா!! பிரபல நடிகை பகிர்ந்த வேதனை சம்பவம்!

அக்கா.. ஒரு படத்துல நடிக்கணும் வாங்க-ன்னு கூப்டாங்க.. ஆனால்.. போனதுக்கு அப்புறம் !! 20 வயசுல இது தேவையா!! பிரபல நடிகை பகிர்ந்த வேதனை சம்பவம்!

தமிழ் படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக அறியப்படுபவர் ஷர்மிளா. இப்போது அம்மா, அக்கா போன்ற குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனக்கு நடந்த மோசமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த சம்பவத்தில் தன் மகன் வயது உள்ள நபர்கள் தன்னை வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு பீதியைக் கிளப்பியுள்ளார்.

அந்த நேர்காணலில் “குறிப்பிட்ட நபர்கள் என்னை அழைத்து அக்கா ஒரு படத்துல நடிக்கணும். நேர்ல வாங்க பேசணும் என்றார்கள். நான் சென்ற போது எனக்கு கதை சொன்னார்கள். நான் சம்பளம் பற்றி சொன்னேன். அவர்கள் சம்பளத்தைவிட கூடுதலாக 50000 தருகிறோம். ஆனால் நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்யணும் என்றார்கள். அதுக்கு சம்மதம்னா இப்பவே அட்வான்ஸ் வாங்கிக்கொள்ளலாம் என்றார்கள். அவர்கள் எல்லாம் என் மகன் வயதில் இருப்பவர்கள்.

என் முன்னே இருந்தது என் மகன் வயது நபர்கள். அவர்களுக்கு 23, 25 வயது தான் இருக்கும் பணம் இருக்கிறது என்பதற்காக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தன்னைவிட 30 வயது அதிகமான ஒரு நடிகையை படுக்கைக்கு அழைக்கிறார்கள்.

நான் அக்கா அக்கான்னு சொல்லிட்டு இப்படி படுக்கைக்கு கூப்பிட்றீங்களே எனக் கேட்டபோது, அதெல்லாம் தெரியாது அட்ஜஸ்ட் பண்ணினாதான் வாய்ப்பு என்றார்கள். நான் வாய்ப்பே வேண்டாம் என்று வந்துவிட்டேன். முன்பெல்லாம் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்றால் நாசூக்காக கேட்பார்கள். இப்போதெல்லாம் நேரடியாக ஓப்பனாகவே படுக்கைக்கு அழைக்கிறார்கள்” என வேதனையை வெளியிட்டுள்ளார்.