Thursday, March 28, 2024
Home > Cinema > எண்ட்ரி கொடுத்த ஷாலினி அஜித்… ஒரே நாளில் மொய்த்த ரசிகர்கள்!

எண்ட்ரி கொடுத்த ஷாலினி அஜித்… ஒரே நாளில் மொய்த்த ரசிகர்கள்!

நடிகர் அஜித் மற்றும் ஷாலினி தம்பதிகள் தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்படுகின்றனர்.

நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பொங்கலுக்கு இந்த படம் விஜய்யின் வாரிசு திரைப்படத்தோடு வெளியாக உள்ளது.

`

இதையடுத்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ஒன்றரை ஆண்டுகாலம் உலக சுற்றுலா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

```
```

கடந்த சில ஆண்டுகளாக அஜித் சமூகவலைதளங்கள், பொதுத் தளங்களில் தலைகாட்டுவதில்லை. இந்நிலையில் இப்போது அஜித் குடும்பத்தில் இருந்து அவரின் மனைவி ஷாலினி அஜித் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார்.

அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தோடு அவர் தன்னுடைய முதல் பதிவை பகிர, கிட்டத்தட்ட ஒரு லட்சம் பாலோயர்ஸ்கள் அவரை பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.