Monday, April 20, 2026
Home > Cinema > 39 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத பாக்யராஜின் மகள்… என்ன காரணம் தெரியுமா?

39 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத பாக்யராஜின் மகள்… என்ன காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவுக்கு மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிலேயே திரைக்கதை மன்னன் என்று பெயர் பெற்றவர் பாக்யராஜ். அவர் 80 களில் இயக்கி நடித்த திரைப்படங்கள் வரிசையாக சூப்பர் ஹிட் ஆகின. ஆனால் 90 களுக்குப் பிறகு அவருக்கு மார்க்கெட் குறைய ஆரம்பித்தது.

இதனால் அவர் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகி ஒரு இடைவெளிக்குப் பிறகு கம்பேக் கொடுத்தார். அப்போது அவர் இயக்கிய திரைப்படம்தான் பாரிஜாதம். இந்த படத்தில் அவரின் மகளான சரண்யாவைக் கதாநாயகியாக அறிமுகம் செய்தார்.

இந்த படம் பெரியளவில் வெற்றிபெறவில்லை என்றாலும் சரண்யா திறமையான நடிகை என்று பெயர் பெற்றார். ஆனால் அதன் பின்னர் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. மேலும் தற்போது 39 வயதாகும் அவர் இதுவரை திருமணமும் செய்துகொள்ளவில்லை.

பாரிஜாதம் படத்தை முடித்ததும் அவர் அமெரிக்காவுக்கு சென்று படித்தார். அப்போது அங்கு ஒருவரை அவர் காதலித்ததாகவும், ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்தததால் அவர் மூன்று முறை தற்கொலை முயற்சியில் ஈடுபடதாகவும், அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால்தான் சரண்யா இப்போது வரை திருமணமே செய்துகொள்ளவில்லையாம். இப்போது அவர் ஆடை அணிகலன்கள் வடிவமைத்து விற்பனை செய்யும் ஒரு வேலையை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது திருமணம் வேண்டாம் என்ற முடிவில் அவர் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.