Thursday, May 21, 2026
Home > Cinema > சினிமாவுக்கு நீண்ட பிரேக்… நடிகை சமந்தா எடுத்த முடிவுக்குக் காரணம் என்ன?

சினிமாவுக்கு நீண்ட பிரேக்… நடிகை சமந்தா எடுத்த முடிவுக்குக் காரணம் என்ன?

சமந்தா சமீபகாலமாக உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்.

தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. அவர் நடித்த பல படங்கள் பெரிய அளவில் ஹிட்டான நிலையில் தன்னுடைய சக நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமணம் சில ஆண்டுகளிலேயே முறிந்தது. இருவரும் விவாகரத்து செய்து இப்போது தங்கள் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர்  சமந்தா “myositis என்ற உடல் நலப் பிரச்சனையால் நான் பாதிக்கப்பட்டேன். இதிலிருந்து குணமானதும் அதை தெரிவிக்கலாம் என நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை அதிக நாட்கள் தேவைப்படுகிறது. உங்கள் அன்பே என்னுடைய ஒவ்வொரு கடினமான நாளையும் எதிர்கொள்ள உதவுகிறது. எனது மருத்துவர்கள் நான் முழுமையாக குணமாகிவிடுவேன் என உறுதியாக இருக்கிறார்கள். உடல்ரீதியாகவும் உணர்ச்சிபூர்வமாகவும், எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் அமைந்துள்ளன. ஆனால் நான் இப்போது குணமாவதற்கு அருகில் உள்ளதாக நம்புகிறேன். இதுவும் கடந்து போகும்” எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் இதுவரை ஒத்துக்கொண்ட படங்களை மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.