Thursday, June 4, 2026
Home > Cinema > எவ்ளோ வேணாலும் தடவிக்கோன்னு சொல்லிட்டேன்… தான் சந்தித்த பிரச்சனை குறித்து பேசிய நடிகை ரீஹானா!

எவ்ளோ வேணாலும் தடவிக்கோன்னு சொல்லிட்டேன்… தான் சந்தித்த பிரச்சனை குறித்து பேசிய நடிகை ரீஹானா!

பல சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரீஹானா. சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இது தவிர, மீனாட்சி பொண்ணுங்க மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார்.

நடிப்புக்கு வருவதற்கு முன்னர் செவிலியராகவும், சமையல் தொழிலிலும் அவர் இருந்துள்ளார். தன்னைப் பற்றிய கேள்விகளுக்கு எந்த மறுப்பும் இல்லாமல் ஓப்பனாக பதில் சொல்லி வருகிறார் ரீஹானா. இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பொது இடத்தில் தான் அனுபவித்த பாலியல் தொல்லை பற்றி பேசியுள்ளார்.

அதில் ”நான் நர்ஸாக பணியாற்றிக் கொண்டிருந்த போது ஒரு நாள் பஸ்ஸில் சென்றேன். அப்போது ஒரு நபர் என்னைத் தடவிக் கொண்டிருந்தார்.  எனக்கு பயங்கர எரிச்சலை ஏற்படுத்தியது. தாங்க முடியாத நான் அவரிடம் நான்”என்னை தடவ வேண்டுமா… இந்த பக்கமா தடவு. அந்த பக்கம் எரிகிறது.” எனக் கோபமாக கத்திவிட்டேன். அங்கிருந்த அனைவரும் அதைப் பார்த்தார்கள் ஆனால் அவரை ஒன்றும் சொல்லவில்லை.

பின்னர் நான் கண்டக்டரிடம் அதைப் பற்றி சொன்னதும், அவரை திட்டி பேருந்தில் இருந்து இறக்கிவிட்டார். இதெ போல நான் பணியாற்றிய மருத்துவரும் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். உடனே அவரிடம் இருந்து வேலையை விட்டுவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.