வேலன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் ஹிட்டுக்கு அந்த படத்தில் இடம்பெற்ற புஷ்பா காமெடி மிக முக்கியக் காரணம். தெரியாத் தனமாக ஒரு விலைமாது பெண்ணை திருமணம் செய்துகொண்டு படாத பாடு படும் அவஸ்தையை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார் சூரி. அந்த புஷ்பா வேடத்தில் நடித்தவர்தான் ரேஷ்மா. படத்தில் கொஞ்ச நேரமே அவர் வந்தாலும் படம் முழுவதும் நகைச்சுவைக் காட்சிகள் அவரை சுற்றியே உருவாக்கப்பட்டு இருக்கும்.

அந்த படம் பெரிய வெற்றி பெற்றாலும் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவருக்கு கைகொடுத்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல். சின்னத்திரை பார்ப்பவர்களும், பார்க்காதவர்களும் நன்கு பரிச்சயம் ஆனவர் ரேஷ்மா. பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் கோபியின் காதலியாக வருபவர். அந்த சீரியலில் குடும்பப் பாங்கான பெண்ணாக சேலையில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

சினிமாவில் சாதிக்க முடியவில்லை என்றாலும் சீரியலில் தனக்கான இடத்தைப் பிடித்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறார் ரேஷ்மா. ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட ரேஷ்மா சினிமா நடிகையாக விரும்பி இந்த துறைக்குள் வந்தார். அவரை தமிழில் பிரபலம் ஆக்கியது வேலன்னு வந்துட்டா வெள்ளக்காரன் திரைப்படம்தான்.

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் கோபிக்கு கல்யாணம் ஆனது தெரியாமல் அவரைக் காதலிக்கும் பெண்ணாக நடித்திருப்பார். சீரியலில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்தாலும், சமூகவலைதளங்களில் அல்ட்ரா மாடர்னாக வலம் வருகிறார்.

இந்நிலையில் இப்போது நெஞ்சுவரை மட்டுமே இருக்கும் டிஷர்ட்டும், ஸ்கர்ட்டும் அணிந்து வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

