நடிகை ராஷ்மிகா இப்போது பேன் இந்தியா நடிகையாகி அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கன்னட சினிமாவில் நடித்து வந்த ராஷ்மிகா இப்போது இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையாக வளர்ந்துள்ளார். இவரை பெரியளவில் பிரபலப்படுத்தியது. இவரின் எதார்த்தமான நடிப்பும் துடுக்குத் தனமான நடவடிக்கைகளும் அவரை 2 கே கிட்ஸ் மத்தியில் பிரபலமாக்கியது. அதுமட்டுமில்லாமல் அவரை நேஷனல் கிரஷ் என எல்லாம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தெலுங்கில் கீத கோவிந்தம் என்ற ஹிட் மூலம் கவனிக்க வைத்த ராஷ்மிகா, அந்த படத்தின் கதாநாயகன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே இதுவரை மறுத்து வருகின்றன. ஆனாலும் தொடர்ந்து வரும் அந்த கிசுகிசுக்கள் ஓய்ந்தபாடில்லை.

கிசுகிசுக்கள் ஒருபுறம் இருந்தாலும், தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்த அவர், சமீபத்தில் விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவருக்கு பெரிய நடிக்கும் வாய்ப்பு இல்லை என்றாலும், கவர் ச்சி நடனம் ஆடி ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.

அடுத்து தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிப்புக்கு இருக்கும் ரசிகர்களை விட இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவர் பகிரும் புகைப்படங்களுக்குதான் அதிக ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
அந்த வகையில் இப்போது அவர் குறைவான ஆடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளன.


