Thursday, April 30, 2026
Home > Cinema > போட்டோஷூட் வைரலழகி ரம்யா பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

போட்டோஷூட் வைரலழகி ரம்யா பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

ஜோக்கர் படம் மூலமாக அறிமுகம் ஆனாலும், ரம்யா பாண்டியனை பிரபலம் ஆக்கியது இடுப்பு மடிப்புகள் தெரிய அவர் வெளியிட்ட போட்டோஷூட்கள்ய்தான். அதன் பிறகு அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இவர் 1990 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை திருநெல்வேலியில் முடித்தார்.பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் குறும்படங்களில் நடித்து வந்துள்ளது.பின்னர் மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார்.

தமிழில் கடைசியாக ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்து இருந்தார்.இந்த திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. சமீபத்தில் மலையாளத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார்.

சமூகவலைதளங்களில் தொடர்ந்து கிளா மர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது டைட்டான உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.