Friday, April 17, 2026
Home > Cinema > வெறும் உள்ளாடையுடன் முதல் முறையாக அந்த இயக்குனர் முன் நின்றேன்.. ரகசியம் உடைத்த நயன்தாரா

வெறும் உள்ளாடையுடன் முதல் முறையாக அந்த இயக்குனர் முன் நின்றேன்.. ரகசியம் உடைத்த நயன்தாரா

தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படம் மூலமாக அறிமுகமான நயன்தாரா, சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையானார். பின்னர் சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்து பிரபலங்களோடு காதலில் விழுந்ததின் மூலம் தன்னை பரபரப்பான நடிகையாக்கிக் கொண்டார். இந்த இரண்டு காதல்களும் பிரிந்த நிலையில் பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனோடு காதலில் விழுந்தார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் பிரபல நடிகை நயன்தாராவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அதையடுத்து அவர்கள் வாடகைத்தாய் மூலமாக இரட்டைக் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள்.

இந்தியாவில் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள திருமணம் ஆகி 5 ஆண்டுகாலம் ஆகியிருக்க வேண்டும். ஆனால் நான்கு மாதங்களே ஆன நிலையில் எப்படி வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.  இந்நிலையில் இதுபற்றி விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை தமிழக சுகாதாரத்துறை அமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்கள் விசாரணை நடத்தி அளிக்கும் தகவலைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் விசாரணையில் அவர்கள் மேல் எந்த தவறும் இல்லை என்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா தான் பில்லா படத்தில் டூ பீஸ் என சொல்லப்படும் பிகினி உடையில் நடித்தது குறித்து பகிர்ந்துள்ளார். அதில் “பில்லா திரைப்படத்தில் பிகினி காட்சி இருக்கிறது என்று எனக்கு தெரியும். ஆனால் என் உடல்வாகுக்கு பிகினி உடை பொருந்துமா என இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் தயங்கினார்கள்.  ஏனென்றால் அதற்கு முன்னர் நான் அவ்வளவு கிளாமராக நடித்தது இல்லை.  அதனால் அவர்களின் சந்தேகத்தை போக்க, நான் பிகினி உடையில் அவர்கள் முன் போய் நின்றேன்.

அப்போதுதான் அவர்கள் என்னால் அந்த காட்சியில் நடிக்க் முடியுமென்பதை உணர்ந்துகொண்டார்கள். என்னால் அந்த மாதிரி காட்சியிலும் நடிக்க முடியும் என்பதைக் காட்ட அந்த காட்சியில் நடித்தேன்” எனக் கூறியுள்ளார்.