ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் த க்ளவுட்ஸ் திரைப்படம்தான். அதில் ஏழ்மையால் தவிக்கும் ஒரு பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா. அந்த படம் மாளவிகாவுக்கு உலக அளவில் புகழ்பெற்று தந்தது. ஆனாலும் அவருக்கு பாலிவுட்டில் அடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அதனால் மலையாளம் மற்றும் தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதற்கு முன்பே ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

இடையில் முன்னணி நடிகையான நயன்தாராவின் மேக்கப் மற்றும் நடிப்புப் பற்றியும், லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் ஆகியவை பற்றி சர்ச்சையில் சிக்கினார். பின்னர் நான் நயன்தாராவை தவறாக எதுவும் சொல்லவில்லை எனக் கூறி சமாளித்தார். தற்போது மலையாளப் படங்கள் மற்றும் இசை ஆல்பம் என தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமிலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் குவிந்துள்ளது. அதற்குக் காரணம் அவர் வெளியிடும் புகைப்படங்கள்தான். சமீபத்தில் தன்னை விட 9 வயது குறைந்த இளைஞனைக் காதலிக்கும் வயது முதிர்ந்த பெண்ணாக நடித்திருந்தார். அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கிளா மரான பல போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அவை வைரலாகி வருகின்றன. லட்சக் கணக்கில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவர் உடல் முழுவதும் டாட்டூ அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. மேலும் அந்த புகைப்படத்தை எடுத்து நடிகர் விக்ரம்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
