Sunday, April 19, 2026
Home > Cinema > ட்ரெய்னில் வைத்து ரம்பாவை சரமாரியாக தாக்கிய லைலா… பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?

ட்ரெய்னில் வைத்து ரம்பாவை சரமாரியாக தாக்கிய லைலா… பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?

தமிழ் சினிமாவில் தொடையழகி என பெயரெடுத்தவர் ரம்பா. 90 களின் இறுதியிலும் 2000 களின் தொடக்கத்திலும் பல படங்களில் கவர்ச்சி தாரகையாக வலம் வந்தார். நடிப்பில் அக்கறைக் காட்டவில்லை என்றாலும், கவர்ச்சியில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தார்.

இந்நிலையில் தன்னுடைய சினிமா வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் த்ரி ரோசஸ் என்ற படத்தை தயாரித்து, அது படுதோல்வி அடைந்து பொருளாதார பிரச்சனைகளை சந்தித்தார்.

அந்த படத்தில் ரம்பாவோடு, ஜோதிகா மற்றும் லைலா ஆகிய முன்னணி நடிகைகளும் நடித்திருந்தனர். இவர்களோடு விவேக் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் மோசமான திரைக்கதைக் காரணமாக இந்த படம் படுதோல்வி அடைந்தது.

இந்த படத்தின் ஷூட்டிங்குக்காக மூவரும் ரயிலில் ஊட்டிக்கு சென்றுள்ளனர். அப்போது லைலா திடீரென்று ரம்பாவை சரமாரியாகத் தாக்க ஆரம்பித்துள்ளார். சில நிமிடங்களுக்குப் பிறகு தனக்கு என்ன ஆனது என்பதே தெரியவில்லை. சுயநினைவில்லாமல் அடித்துவிட்டேன் எனக் கூறி சமாளித்துள்ளார்.

ஆனால் உண்மையானக் காரணம் அது இல்லையாம். அதுபற்றி சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார். அதில் “வி ஐ பி என்ற படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க லைலாதான் ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால்  தயாரிப்பாளர் அலுவலகத்துக்கு வந்து பார்க்க சொன்ன போது லைலா, நான் வரமாட்டேன். வேண்டுமானால் அவர் வந்து என்னை ஹோட்டலில் பார்க்கட்டும்.” என திமிராக பேசிவிட்டாராம்.

இதனால் கடுப்பான தயாரிப்பாளர் லைலாவைத் தூக்கிவிட்டு ரம்பாவைக் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார். இதனால் ரம்பாவால்தான் தனக்கு அந்த பட வாய்ப்புப் போனது என நம்பிய லைலா, அதனால்தான் ரம்பாவை ரயிலில் வைத்து தாக்கியுள்ளார் “ எனக் கூறியுள்ளார். அப்போது ஜோதிகாதான் லைலாவிடம் இருந்து ரம்பாவைக் காப்பாற்றினாராம்.