ஸ்ரீதேவியின் இரண்டு மகள்களும் இப்போது சினிமாவில் நடித்து வருகின்றனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி க்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இருமகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரையும் சினிமாவில் நடிக்க வைக்க ஸ்ரீதேவி ஆசைப்பட்டார்.
ஆனால் அவரின் இறப்புக்குப் பின்னரே அது நிறைவேறியது. அவரின் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது பல பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
அத்தோடு நிலலாமல் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு லட்சக்கணக்கில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.அவர் வெளியிடும் புகைப்படங்கள் மில்லியன் கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.
இப்போது அவரைப் போலவே ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளும் ஜான்வியும் தங்கையுமான குஷி கபூரும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரும் அக்காவைப் போலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களைப் பகிர, அது இப்போது வைரலாகி வருகிறது.

