நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் தயாரிப்பாளர் போனி கபூருக்கும்,மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் மூத்த மகளாக பிறந்தார். இவரையும் தன்னை போலவே பாலிவுட்டில் ஹீரோயினாக்க வேண்டும் என ஆசைப்பட்டார் ஸ்ரீதேவி.

ஆனால் அவரின் மறைவுக்குப் பின்னர் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் மராத்திய சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சாய்ராட் படத்தின் ரீமேக்.இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஜீ சினி விருதினை வென்றார் ஜான்வி கபூர்

தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் நெட் ஃபிளிக்ஸில் என்ற ஓடிடி தளம் தயாரித்த கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் ஜான்வி, விரைவில் தென்னிந்திய படங்களில் நடிக்க உள்ளேன் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அவர் புகைப்படங்களை மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி உற்சாகத்தை அளித்துள்ளது

