Tuesday, October 15, 2024
Home > Cinema > சேலையில பத்திக்குற அளவுக்கு ஃபயரா ஒரு போட்டோஷூட் … ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

சேலையில பத்திக்குற அளவுக்கு ஃபயரா ஒரு போட்டோஷூட் … ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஜான்வி கபூர் இவர் 1997 ஆம் ஆண்டு நடிகை ஶ்ரீ தேவி மற்றும் பிரபல தயாரிப்பாளார் போனி கபூருக்கு மகளாக பிறந்தார். இவர் இப்போது பாலிவுட் திரையுலகின் முக்கிய கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார்.

இந்தியா முழுவதும் கலக்கிய நடிகையான ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின்னர் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ‌மராத்திய சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சாய்ராட் படத்தின் ரீமேக்.இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஜீ சினி விருதினை வென்றார் ஜான்வி கபூர்.

விரைவில் ஜான்வி கபூர், தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார். ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் கொரட்டாலா சிவா நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் பேன் இந்தியா ரிலீஸாக உருவாகி வருகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

`

இப்போது நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் தயாரிப்பாளர் போனி கபூருக்கும்,மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் மூத்த மகளாக பிறந்தார்‌. இவரையும் தன்னை போலவே பாலிவுட்டில் ஹீரோயினாக்க வேண்டும் என ஆசைப்பட்டார் ஸ்ரீதேவி. இவர் நெட் ஃபிளிக்ஸில் என்ற ஓடிடி தளம் தயாரித்த கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

```
```

தென்னிந்தியாவில் ஜான்வி கபூருக்கு அதிக ரசிகர்களைப் பெற்றுத்தந்தது, இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள்தான். அந்த அளவுக்கு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்த அவர் இப்போது வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர, அவை வைரல் ஆகி வருகின்றன.

பாலிவுட் படங்களில் மட்டுமே இதுவரை நடித்திருந்தாலும், இந்தியா முழுவதும் இவர் பிரபலமாக இருப்பதற்குக் காரணம் இன்ஸ்டாகிராமில் இவர் தொடர்ந்து பகிர்ந்து வரும் கிளாமர் புகைப்படங்கள்தான்.