Monday, July 6, 2026
Home > Cinema > இவானா காட்டில் அடைமழை… ஒரே ஹிட்டால் உச்சத்துக்கு செல்லும் மார்க்கெட்!

இவானா காட்டில் அடைமழை… ஒரே ஹிட்டால் உச்சத்துக்கு செல்லும் மார்க்கெட்!

இயக்குனர் பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில் ஜி வி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் இவானா. அந்த படத்திலேயே அவரின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையடுத்து கம்மிங் ஏஜ் படமான லவ் டுடே திரைப்படத்தில் அவர் இயக்குனர் பிரதீப்போடு நடித்துள்ளார். இந்த படம் கடந்த வாரம் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் குறிப்பாக இன்றைய இளைஞர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது.

இந்த படத்தில் இவானாவின் நடிப்பும் பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதனால் அடுத்தடுத்து இவானாவுக்கு வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்த்தது போலவே இப்போது அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதுமட்டும் இல்லாமல் சம்பளமும் பல மடங்கு உயர்ந்துள்ளதாம். சமீபத்தில் அவர் ஒப்பந்தம் ஆன விளம்பரங்களின் மூலமாக மட்டும் அவர் கோடிகளில் சம்பாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.