Wednesday, April 15, 2026
Home > Cinema > உங்களை அப்பா போல நினைத்தேன் !! நீங்கள் இப்படி எண்ணிடமா!! கோபிகா ஷாக் ஆகி பதற்றம் !! காரணம் நயன்தாராவா

உங்களை அப்பா போல நினைத்தேன் !! நீங்கள் இப்படி எண்ணிடமா!! கோபிகா ஷாக் ஆகி பதற்றம் !! காரணம் நயன்தாராவா

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சிம்பு நயன்தாரா காதலும் அதன் பிரிவும் நன்கறிந்த ஒன்றுதான். வல்லவன் திரைப்படத்தில் இணைந்து நடித்த இருவரும் காதலில் விழுந்தனர். ஆனால் சில ஆண்டுகளில் இந்த காதல் பிரிந்தது. அப்போது சிம்புவும் நயன்தாராவும் முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் பரவின. அப்போது அந்த புகைப்படங்களை எல்லாம் சிம்பு தரப்புதான் கசியவிட்டது என கிசுகிசுக்கப்பட்டது.

பிரிந்த காதலர்களாக சிம்புவும் நயன்தாராவும் அறியப்பட்ட நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து இது நம்ம ஆளு திரைப்படத்தின் மூலம் இணைந்து நடித்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.

அந்த படத்தின் ஷுட்டிங்கின் போது நயன்தாரா செய்த குறும்பான சம்பவம் பற்றி நடிகை கோபிகா பகிர்ந்துள்ள தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது நயன்தாரா தயாரிப்பாளர் ஒருவரின் போனில் இருந்து நடிகை நயன்தாரா, கோபிகாவுக்கு ‘ஐ லவ் யு’ என மெஸேஜ் அனுப்பிவிட்டாராம். அந்த மெஸேஜை பார்த்து அதிர்ந்த கோபிகா தயாரிப்பாளருக்கு போன் பண்ணி “உங்களை அப்பா மாதிரி நெனச்சேன். நீங்க இப்படி மெஸேஜ் அனுப்புறீங்களே” எனக் கேட்டுள்ளார்.

நீங்கள் என்னவென்றால் இப்படி மெசேஜ் அனுப்பி இருக்கிறீர்களே.. என்று கேட்டிருப்பார் போல் தெரிகிறது.

அதன் பிறகுதான் அந்த தயாரிப்பாளருக்கு நயன்தாரா செய்த குறும்பு தெரியவந்துள்ளது.இதனை கேட்டதும் அதிர்ந்து போன தயாரிப்பாளர் ஒரு நிமிடம் அவதானித்து யார் அந்த மெசேஜ் அனுப்பியது என்று பார்த்து உண்மையை உணர்ந்தவராக நடிகை நயன்தாரா விளையாட்டாக இதனை செய்திருக்கிறார்.. நீங்கள் எதுவும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.. என்று கூறியிருக்கிறார்.இது குறித்து நடிகர் நயன்தாராவிடம் கேட்ட பொழுது ஹி ஹி ஹி என பல்லை காட்டி சிரித்து இருக்கிறார்.