Wednesday, April 15, 2026
Home > Cinema > வாரிசு நடிகையை திருமணம் செய்கிறாரா நடிகர் சிம்பு… இதுதான் இப்ப வைரல்!

வாரிசு நடிகையை திருமணம் செய்கிறாரா நடிகர் சிம்பு… இதுதான் இப்ப வைரல்!

தமிழ் சினிமாவின் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிம்பு. 40 வயது நெருங்கிய சிம்பு இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிம்பு தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பல காதல்களையும், காதல் தோல்விகளையும் சந்தித்துள்ளார். தொடக்கத்தில் தன்னோடு வல்லவன் படத்தில் நடித்த நயன்தாராவை காதலிக்க, பின்னர் அந்த காதல் தோல்வியில் முடிந்தது.

பின்னர் வாலு படத்தில் நடித்த போது ஹன்சிகாவைக் காதலித்தார். ஆனால் அந்த காதலும் பின்னர் கைகூடாமல் போனது. இந்நிலையில் ஈஸ்வரன் படத்தில் தன்னோடு நடித்த நிதி அகர்வாலை இப்போது டேட்டிங் செய்வதாக சொல்லப்பட்டது.

ஆனால் அதன் பின்னர் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த சித்தி இத்னானியை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் கல்யாணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த திருமணத்துக்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது தன்னுடைய நீண்டநாள் தோழியும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமாரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன. சிம்புவும் வரலட்சுமியும் போடா போடி திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே வரலட்சுமி நடிகர் விஷாலை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் இருவரின் காதல் திருமணம் அளவுக்கு செல்லவில்லை. இந்நிலையில் இப்போது சிம்பு வரலட்சுமியை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இதைக் கேட்கும் சிம்பு ரசிகர்கள் எப்படியாவது எங்க தலைவருக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிடுங்கப்பா என கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர்.