Saturday, August 22, 2026
Home > Cinema > ஜாதகத்தை நம்பி பாபா படத்தை ரி ரிலீஸ் செய்தாரா ரஜினி… தீயாய் பரவும்  தகவல்!

ஜாதகத்தை நம்பி பாபா படத்தை ரி ரிலீஸ் செய்தாரா ரஜினி… தீயாய் பரவும்  தகவல்!

ரஜினிகாந்தின் பாபா திரைப்படம் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ரி ரிலீஸ் செய்யப்பட்டது.

பாபா திரைப்படம் ரஜினிகாந்தின் கனவுத் திரைப்படம். அந்த படத்துக்கு அவரே கதை திரைக்கதை எழுதி தயாரித்திருந்தார். ஆனால் மோசமான கதையாக்கம் காரணமாக கொடுக்கப்பட்ட பில்டப்புகளாலும் பாபா படம் 2002 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன போதே படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் 22 ஆண்டுகள் கழித்து மறுபடியும் படத்தை மறு எடிட் செய்து ரிலீஸ் செய்தார் ரஜினிகாந்த். இந்த முறையும் படம் தோல்விப் படமாகவே அமைந்தது.

இந்நிலையில் ரஜினி திடீரென பாபா படத்தை ரி ரிலீஸ் செய்யக் காரணம் என்ன என்று ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது. ரஜினியின் ஜாதகப்படி அவரின் அடுத்தப்படம் ப்ளாப் ஆகும் என சொல்லப்பட்டுள்ளதாம். அதனால் ஜெயிலர் திரைப்படம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகதான் ஏற்கனவே ப்ளாப் ஆன பாபா படத்தை இப்போது ரி ரிலீஸ் செய்துள்ளார் ரஜினி என்று கிசுகிசுக்கப்படுகிறது.