சினிமா உலகம் எவ்வளவோ முன்னேறினாலும் இன்னும் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவான இடமாகதான் இருக்கிறது. சமீபத்தில் இந்திய சினிமாத்துறையில் பரவிய மீ டு இயக்கமே அதற்கு சான்று. இதில் பல பெண்கள் தாங்கள் யார் யாரெல்லாம் தங்களை பாலியல் ரீதியாக அத்திமீறினார்கள் என வெளிப்படுத்தினர்.
அதில் பலர் நாம் லெஜண்ட்களாக கொண்டாடப்படும் கலைஞர்களும் இடம்பெற்று வந்தனர். தமிழ் சினிமாவில் அதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பாடல் ஆசிரியர் வைரமுத்து, பாடகர் கார்த்தி உள்ளிட்ட பலர் இடம்பெற்றிருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சினிமாவில் மட்டுமில்லாமல் சீரியல்களில் கூட இந்த பிரச்சனை உள்ளதாக பல சீரியல் நடிகைகளும் இப்போது வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் சீரியல் நடிகையான ஜீவிதா தான் சினிமாவில் நடிக்க முயன்ற போது எதிர்கொண்ட பிரச்சனை குறித்து இப்போது பேசியுள்ளார். இவர் கடைகுட்டி சிங்கம் திரைப்படம் மற்றும் பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் ஜீவிதா ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில் “நான் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமான போது எனக்கு ஒரு நாளைக்கு நாப்பதாயிரம் சம்பளம் பேசினார்கள். ஆனால் நீங்கள் தினமும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ளணும் எனக் கூறினர். நான் இதைக் கேட்டு அதிர்ச்சியாகி முடியவே முடியாது என்று சொல்லிவிட்டேன்.
உடனே நீங்க நடிக்க மட்டும்தான் செய்வீர்கள் என்றால் உங்களுக்கு பத்தாயிரம்தான் சம்பளம் என சொல்லிவிட்டார்கள். அவ்வளவுதான் சம்பளமும் கொடுத்தார்கள்” எனக் கூறியுள்ளார். ஜீவிதா பகிர்ந்துள்ள இந்த சம்பவம் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
