Friday, April 17, 2026
Home > Cinema > ஜீவா, சுந்தர் சி உடன் ரகசிய உறவு?.. கல்யாணத்தை வெறுக்க இதுதான் காரணம்.. அனுயா ஓபன் டாக்..!

ஜீவா, சுந்தர் சி உடன் ரகசிய உறவு?.. கல்யாணத்தை வெறுக்க இதுதான் காரணம்.. அனுயா ஓபன் டாக்..!

2008 ஆம் ஆண்டு ரிலீஸான சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் அனுயா. துபாயில் பிறந்த அவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. சிவா மனசுல சக்தி திரைப்படம்  மிகப்பெரிய வெற்றி பெற்று அந்த படத்தின் இயக்குனர் ராஜேஷ், ஹீரோ ஜீவா எல்லாம் அடுத்த லெவலுக்கு சென்றாலும் அனுயா பெரிதாக வாய்ப்புகளைப் பெறவில்லை.

ஒரு சில படங்களில் நடித்தாலும் அவை பெரிய ஹிட் அடிக்கவில்லை. இதனால் நண்பன் படத்தில் துணை நடிகை ரேஞ்சுக்கு ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் இந்தி சீரியல் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இதையடுத்து சமீபத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் தன்னைப் பற்றி பரவிய வதந்திகள் பற்றி பேசியுள்ளார்.

அந்த பேட்டியில் தன்னை நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஜீவா மற்றும் இயக்குனர் சுந்தர் சி ஆகியோரோடு இணைத்து வைத்து கிசுகிசுக்களைப் பரப்பி விட்டனர். அவை அனைத்துமே பொய்யான தகவல்கள் எனக் கூறியுள்ளார். மேலும் இப்போது வரை தான் சிங்கிளாகதான் இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

ஏன் சிங்கிளாகவே இப்போதும் இருக்கிறீர்கள் என ஒரு ரசிகர் கேட்ட போது “என்னை சுற்றி எந்தவொரு நல்ல ஆணையும் நான் கண்டுபிடிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.