Thursday, May 14, 2026
Home > Cinema > மீனாவுக்கு விபூதி அடித்த ரஜினிகாந்த் & கோ.. 24 வருஷமா இன்னும் அத மறக்கலயாம்!

மீனாவுக்கு விபூதி அடித்த ரஜினிகாந்த் & கோ.. 24 வருஷமா இன்னும் அத மறக்கலயாம்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக 45 ஆண்டுகளாக வலம் வந்துகொண்டிருப்பவர் ரஜினிகாந்த். அவரின் சினிமா கேரியரில் 5 தலைமுறை நடிகர்களோடு அவர் நடித்துள்ளார். அந்த வகையில் ரஜினிக்கு சிறந்த கதாநாயகிகளில் ஒருவராக மீனா இன்றும் கொண்டாடப்படுகிறார். ரஜினியோடு எஜமான் முத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதற்கு முன்பு அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இந்நிலையில் 24 வருடங்களுக்கு முன்னர் வெளியான படையப்பா படத்தில் நீலாம்பரி வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது மீனாதானாம். ஆனால் மீனாவுக்கு குழந்தை முகம் அவர் வில்லியாக நடித்தால் எடுபடாது என கே எஸ் ரவிக்குமார் சொன்னதைக் கேட்டு ரஜினிகாந்த் அந்த வேடத்தை அவருக்குக் கொடுக்கவில்லையாம். அதன் பின்னர்தான் ரம்யா கிருஷ்ணன் அந்த வேடத்தில் நடித்தார்.

ஆனால் படம் ரிலீஸ் ஆன போது நீலாம்பரி  வேடம் மிகப்பெரிய அளவுக்குப் பாராட்டுகளைப் பெற்றது. அதனால் அந்த வேடத்தைக் கொடுக்காததால் மீனாவுக்கு இன்னமும் தன் மேல் கோபம் இருப்பதாக ரஜினிகாந்த் ஒரு மேடை நிகழ்வில் ஓப்பனாக பேசியுள்ளார்.