Sunday, May 19, 2024
Home > Cinema > இறப்பதற்கு முன்னர் விவேக்கு இப்படி ஒரு ஏக்கம் இருந்ததா?.. பிரபல நடிகர் சொன்ன தகவல்!

இறப்பதற்கு முன்னர் விவேக்கு இப்படி ஒரு ஏக்கம் இருந்ததா?.. பிரபல நடிகர் சொன்ன தகவல்!

சின்ன கலைவாணர் விவேக் 1961 ஆம் ஆண்டு பிறந்த விவேக் பள்ளி படிப்பை முடித்த பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்ட படிப்பை முடித்தார். பின்னர் சென்னை தலைமை செயலகத்தில் அரசு பணியில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றி வந்தார். என்ன தான் அரசு பணியில் இருந்தாலும் நடிப்பின் மீதும் நகைச்சுவையின் மீதும் தனி ஆர்வம் கொண்டிருந்த விவேக். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறு சிறு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

`

இந்த நிலையில் 1987 ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்ற திரைபடத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இவரை தேடி வந்ததும். திரைத்துறையில் விவேக் கொண்ட ஆர்வத்தால் . அதன் பிறகு தொடர்ந்து நடித்த விவேக் 90 களில் உச்சத்தைத் தொட்டார். கவுண்டமணி, வடிவேலு என தன் சக நடிகர்களோடு சேர்ந்து நடித்து பல முத்திரை நகைச்சுவைக் காட்சிகளில் நடித்துள்ளார்.

```
```

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த நாளே மாரடைப்பு வந்து மரணமடைந்தார். அவர் இறப்புக்கு அவருடைய இதயம் பலவீனமாக இருந்ததே காரணம் என சொல்லப்பட்டது. ஆனால் கோவிட் ஊசியால் அவர் இறந்திருக்க கூடுமெனவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு நெருக்கமாக இருந்த போண்டாமணி “விவேக் சாருக்கு அவரின் மகன் மேல் பாசம் அதிகம். அந்த பையன் காய்ச்சல் வந்து இறந்த பின்னர் அவர் மன வேதனையில் இருந்தார். அதனால் குடிப்பழக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதனால்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம்” என போண்டாமணி கூறியுள்ளார்.