மீரா ஜாஸ்மின் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

தமிழில் அவர் நடித்த ரன், சண்டக்கோழி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிப்படங்களாக அமைந்தன. இந்த படங்களில் அவரின் நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டது.

தமிழை விட அவரது தாய்மொழியான மலையாளத்தில்தான் அதிக படங்களை நடித்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் இவருக்கான வாய்ப்புகள் குறைந்ததும் சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

இப்போது 10 வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க திரும்பியுள்ளார். சில மலையாளப் படங்களிலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் அவர் உச்சத்தில் இருந்த போது ஹோம்லியான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்த அவர், இப்போது இரண்டாவது இன்னிங்ஸ்க்காக கவர்ச்சி ரூட்டுக்கு தாவியுள்ளார்.

தொடர்ந்து தன்னுடைய சமூகவலைதளப் பக்கங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார்.



