Sunday, September 27, 2026
Home > Cinema > “உலகத்துலயே சிறந்த வளைவு இதுதான்…” கவனம் ஈர்க்கும் கனிகாவின் போட்டோவும் கேப்ஷனும்!

“உலகத்துலயே சிறந்த வளைவு இதுதான்…” கவனம் ஈர்க்கும் கனிகாவின் போட்டோவும் கேப்ஷனும்!

நடிகை கனிகா தற்போது எதிர்நீச்சல் சீரியல் மூலமாக தமிழ் பெண் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

தொடர்ந்து எதிரி உள்ளிட்ட பல படங்களில் நடித்த கனிகாவுக்கு நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியானவரலாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை கனிகா. இந்த திரைப்படத்தில் அவர் மையக் கதாபாத்திரமாக நடிக்கவில்லை என்றாலும், அவரது கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன.

தமிழில் எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு போன்ற பல படங்களில் நடித்துள்ள தாய்மொழி படங்களான மலையாள படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். இவர் தமிழ் படங்களை தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழில் குரல்,விக்ரம் நடித்த கோப்ரா, விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஒரே யாவரும் கேளீர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இதை தவிர பாப்பன், இடைரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் எதிர்நீச்சல் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார்.

இந்த தொடர் மூலம் தமிழக பெண் ரசிகர்களைக் கவர்ந்துள்ள கனிகா, இன்ஸ்டாகிராமில் வெளியிடும் அவரது புகைப்படத்துக்காக தனியாக ஒரு ரசிகர் பட்டாளததையே உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் புடவையில் இருக்கும் தனது புகைப்படத்தைப் பகிர்ந்த “உலகத்திலேயே சிரிப்புதான் சிறந்த வளைவு. அதாவது தம்மைக் கோபமாக எதிர்கொள்பவரைக் கூட சிரிப்பின் மூலம் சமானதானப்படுத்த முடியும்” என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.