தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலுமே முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் கடந்த 12 வருடங்களுக்கு மேல் இருந்து வருபவர். 2004 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான Na Kyun! Ho Gaya என்ற திரைப்படம் தான் காஜல் அகர்வாலுக்கு முதல் திரைப்படம். அதன் பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலுமே நடித்து வந்தார். தமிழில் இவரை பாரதிராஜா பொம்மலாட்டம் படம் மூலம் அறிமுகப்படுத்தினார்.

ஆனால் காஜலுக்கு பிரேக் ஆக அமைந்தது 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான Mahatheera திரைப்படம் காஜல் அகர்வால் சினிமா வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றே கூறலாம். அதன் பிறகு இன்று வரை சினிமா உலகில் முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் தொடர்ந்து இருந்து வருகிறார்.

ஒரு வருடத்திற்கு முன்பு பெற்றோர் பார்த்து வைத்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார். சமீபத்தில் அவருக்கு குழந்தையும் பிறந்தது.

காஜல் அகர்வால் சினிமாவில் பிரபலம் ஆனதும், தனது தங்கை நிஷா அகர்வாலை நடிகையாக அறிமுகம் செய்தார். ஆனால் அக்கா அளவுக்கு, நிஷா அகர்வாலால் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை. அதனால் சீக்கிரமே திருமணம் செய்து செட்டில் ஆனார்.

அதன் பிறகு படங்களிலும் பெரிதாக நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது காஜல் அகர்வால் மற்றும் நிஷா அகர்வால் ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

