வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராஷி கண்ணா 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். ஆனால் பாலிவுட்டில் அவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் தென்னிந்தியாவில் அவர் கவனம் செலுத்தினார்.

அவரின் குறிப்பிடத்தக்க அறிமுகமாக அமைந்தது 2014 ஆம் ஆண்டு தெலுங்கில் அக்கினேனி குடும்பமே நடித்த மனம் திரைப்படம். இதையடுத்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார்.தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படங்களின் வெற்றிகள் அவர் மேல் கவனத்தை குவித்தன.

இமைக்கா நொடிகள் படத்துக்குப் பிறகு தமிழில் பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.

அரண்மனை 3 படத்திலும் இவர் நடித்திருந்த நிலையில். சமீபத்தில் இவர் தனுஷுடன் சேர்ந்து நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெற்றி திரைப்படமாக மாறியது. தீபாவளிக்கு அவர் நடிப்பில் வெளியான சர்தார் படமும் அவரின் ஹிட் பட வரிசையில் இணைந்தது. தமிழைப் போலவே தெலுங்கிலும் அவருக்கு வெற்றி படங்கள் அமைந்தன.

பத்தோடு பதினொன்றாக கமர்ஷியல் படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணாவுக்கு சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வெற்றி பெற்ற பார்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் ராஷி கண்ணா. இந்த வெற்றி குறித்து பேசிய அவர் இந்த தொடர் இந்திய அளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில் நான் இனிமேல் பேன் இந்தியா நடிகை என சொல்லிக் கொள்ளலாம் என பெருமிதப் படுத்தியிருந்தார்.

இவருக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக் கணக்கான பாலோயர்கள் உள்ளனர். அவர்களுக்கு விருந்து வைக்கும் விதமாக அழகழகான போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அப்படி இப்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.
