Home > மரு‌த்துவ‌ம் > தலைவலியிருந்து தப்பிக்க சில பயனுள்ள குறிப்புகள்..!

தலைவலியிருந்து தப்பிக்க சில பயனுள்ள குறிப்புகள்..!

21-12-21/10.15am

தலைவலி உருவாக பல காரணங்கள் உள்ளன. தலைவலி என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல, அது நமது உடல் உணவையோ அல்லது நாம் சூழலையோ ஏற்றுக்கொள்ள முடியாத போதும் உடலுக்கும் மனதுக்கும் ஒவ்வாத விஷயத்தை செய்யும்பொழுது தலைவலி பெரும்பாலும் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தலைவலி உருவாக முக்கியமான காரணம் என்னவெனில் மன அழுத்தம் அதிகரிப்பது. மேலும்
உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டாலோ சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் இருந்தாலோ தலைவலி உண்டாகும். தேவையற்ற உணவுகளை உண்பதால் கூட ஏற்படலாம். எடுத்துக்காட்டாக துரித உணவுகள் தேவையற்ற நேரங்களில் உண்பதாலும் தலைவலி ஏற்படலாம்.
அதில் அதிக ஒலியால் சிலருக்கு தலைவலி ஏற்படும்.


தூக்கமின்மையால் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக பலருக்கு தலைவலி அதிகமாக ஏற்படலாம். வேலைச் சுமை காரணமாக சிலருக்கு தலைவலி ஏற்படலாம்.
இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான காரணங்களால் தலைவலி ஏற்படும். தண்ணீர் தாகம் எடுக்கும் பொழுது தண்ணீரைப் பருகாமல் அதிக நேரம் இருந்தால் தலைவலி வருவதற்கு வாய்ப்புள்ளது. இந்த தலைவலி மூலமாக ஆண்களை விட பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த பிரச்சனைக்கு மருத்துவரை அணுக தேவை இல்லை,

முதலில் தினமும் குறைந்த பட்சம் ஏழு மணிநேரம் தூங்குவதை கட்டாயப் படுத்திக் கொள்ளுங்கள், வேலை சுமை காரணமாக சிலர் தூங்காமல் இருக்கலாம். இவ்வாறு தூங்காமல் இருப்பதால் மூளை மற்றும் உடலுக்கு தேவையான ஓய்வை நாம் கொடுக்க தவறுகிறோம். இதனால் மூளை சோர்வடைந்து நமக்கு தலைவலியை கொடுக்கிறது. எனவே நல்ல தூக்கம் மிகவும் அவசியம்.

சரியான நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும். உடலுக்கு பசிக்கும் பொழுது சரியான உணவை உண்ண வேண்டும். சரியான நேரத்தில் சரியான உணவை உண்ணாமல் இருப்பதால் கண்டிப்பாக தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. காலை, மதியம், மற்றும் இரவு ஆகிய மூன்று நேரங்களிலும் உங்கள் உடல் ஏற்றுக்கொள்ளும் உணவை உண்ணுவது மிகவும் அவசியம்.

`

மனக்குழப்பம் உங்களுடைய எண்ணங்கள் சீராக இருக்கவேண்டும். அதாவது தேவையில்லாத விஷயங்களை எண்ணி அதிகமாக சிந்திக்க கூடாது. அவ்வாறு சிந்திக்கும் பொழுது மூளை அதிகபடியான வெலையை செய்கிறது, ஓய்வில்லாமல் மூளை தொடர்ந்து வேலை செய்யும் பொழுது மூளையில் உள்ள நீர்ச்சத்தானது குறைந்து மூளை வறட்சி நிலைக்கு செல்கிறது இதனால் தலைவலி ஏற்படும். எனவே அடிக்கடி நீர் அருந்துவது மிகவும் நல்லது.

தலைவலி ஏற்பட்டுவட்டால் நம் வீட்டிலுள்ள (Home Remedies) பொருட்களை வைத்து எளிமையான முறையில் தீர்வு காணலாம். இதற்கு எந்த மருத்துவரையும் அனுக தேவையில்லை, கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளும் உடலுக்கு எந்த இடம் பாதிப்பையும் கொடுக்காது

முதலில் சுக்கு, மிளகு மற்றும் மல்லி ஆகிய மூன்றையும் பொடியாக்கிக் கொண்டு ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் சுக்கு, மிளகு மற்றும் மல்லி பொடியை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதாவது ஒரு டம்ளர் தண்ணீரானது அரைப்பங்கு வரும்வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அந்த தண்ணீரை வடிகட்டிய பிறகு இளஞ்சூடாக குடிக்க வேண்டும். இது லேசான காரத்தன்மை கொண்டது. இந்த கசாயத்தோடு சிறிதளவு பணம் வெல்லம் சேர்த்து குடிக்கலாம். இவ்வாறு குடிக்கும் பொழுது தலைவலி மட்டுமல்லாமல், இருமல், தொண்டை கரகரப்பு போன்ற அனைத்தும் எளிமையாக குணமடையும்.

```
```

சுக்கு பொடியை சிறிதளவு எடுத்துக்கொண்டு, அதனோடு எலுமிச்சை சாரை பிழிந்து நன்றாக பிசைந்து நெற்றியில் பத்து போடலாம். இவ்வாறு செய்யும் போது எளிதாக குணமடையும். அடுத்து சந்தன பொடியை எடுத்துக் கொண்டு, கிராம்பு பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் சிறிதளவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு பிசைந்த பொடியை நெற்றியில் பத்து போட்டுக் கொள்ளலாம்.

துளசி இலையை கசக்கி சிறிதளவு சாறு எடுக்க வேண்டும். அதே போன்று வெற்றிலையை எடுத்து கசக்கி சிறிதளவு சாறு எடுத்து, துளசிச் சாறையும் சேர்த்து நெற்றி முழுவதும் பத்து போட வேண்டும். இவ்வாறு செய்வதால் விரைவாக குணம் அடையும். சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு பண்ண வேண்டும். ஒரு எலுமிச்சை பழத்தை சரி பாதியாக வெட்டி அந்த பாத்திரத்தில் சிறிதளவு சாறு புளிந்து கொள்ளவும் பாத்திரம் சூடான பிறகு எலுமிச்சை சாறு வற்ற ஆரம்பிக்கும், அப்போது எலுமிச்சை பழத்தை பாத்திரத்தில் நடுவில் லேசாக தேய்க்கும்போது, ஒரு கூழ் போன்ற பேஸ்ட் வரும் இதை எடுத்து ஆற வைத்த பின்பு நெற்றியில் முழுமையாக பூச வேண்டும்.

நொச்சி இலையை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதனோடு வேப்ப இலையை சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி இந்த இரண்டு இலைகளையும் சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும். கொதிக்கும் போது பாத்திரம் மூடி வைக்க வேண்டியது அவசியம், பிறகு இந்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு ஆவிப் பிடித்தால் மிக விரைவாக குணம் அடையும்.

காரட், பீட்ரூட், வெள்ளரிக்காய் மற்றும் வேகவைத்த பசலி கீரை எடுத்து காலையில் ஜூஸ் போன்று செய்து தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமறை தொடர்ந்து அருந்தி வந்தால் தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற அனைத்தும் வராமல் தடுக்கலாம்.

….உங்கள் பீமா