தமிழ் சினிமா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மற்றும் பிரபலங்களின் நேர்காணல்கள் மூலம் பிரபலம் ஆனவர் வி ஜே பார்வதி.

தமிழ்நாட்டு பெண்ணான இவருக்கு சொந்த ஊர் மதுரை. பல பிரபலங்களை நேர்காணல்கள் செய்துள்ள அவர், பல சுவாரஸ்யமான கேள்விகளைக் கேட்டு அதற்கான பதில்களை வாங்குபவர்.

இவரை பெரிதும் பிரபலமாக்கியது பொதுமக்களிடம் ஒரு குறிப்பிட்ட கேள்வியைக் கேட்டு அதற்கான பதில்களை வாங்கி வெளியிட்ட வீடியோக்கள். அதிலும் சில 18+ கேள்விகள் பற்றிய இவரது வீடியோக்கள் வைரல் ஆகின. அது சம்மந்தமாக இவர் மீது விமர்சனங்களும் எழுந்தன.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதியின் சிவகுமார் சபதம் திரைப்படத்திலும் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். இப்போது தொடர்ந்து சினிமா மற்றும் யுட்யூப் வீடியோக்கள் என பிஸியாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

மிகப்பெரிய அளவில் பாலோயர்ஸ்களை இன்ஸ்டாகிராமில் வைத்திருக்கும் இவர், வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் இப்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.




