தளபதி 67 ல் விஷால் நடிப்பது உறுதி… லோகேஷின் வீடியோவைப் பரப்பும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்பாகவே விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார்.
தளபதி 67 படம் டிசம்பர் மாதம் மூனாறில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வில்லன்களாக நடிக்க சஞ்சய் தத் மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இப்போது படத்தின் பிரதான வில்லன் வேடத்தில் நடிக்க தமிழ் நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக விஷாலை நேரடியாக படப்பிடிப்பு தளத்துக்கு சென்று இயக்குனர் லோகேஷின் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
முன்னதாக லோகேஷின் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
