விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் அதிக பட்ஜெட் கொண்ட படமாக வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டன. இன்னும் சில ஆக்ஷன் காட்சிகளும் பாடல் காட்சிகளும் மட்டுமே படமாக்கப்பட உள்ளன. அதற்கான இறுதிக் கட்ட ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் முதல் சிங்கிள் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் இசை வெளியீடு துபாயில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
