Sunday, May 12, 2024
Home > Cinema > விஜய் டிவியின் பிரபல சீரியலுக்கு முற்றுப்புள்ளி… ரசிகர்கள் வருத்தம்!

விஜய் டிவியின் பிரபல சீரியலுக்கு முற்றுப்புள்ளி… ரசிகர்கள் வருத்தம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் இளைஞர்களையும் இளைஞிகளையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சூப்பர் ஹிட் அடித்த சீரியல் ஈரமான ரோஜாவே 2.

இந்த சீரியலில் ஜீவா என்ற கேரக்டரில் நடிகர் திரவியம் நடிக்க, காவியா என்ற கேரக்டரில் கேப்ரில்லா நடித்து வந்தார். இவர்களோடு பார்த்திபன் கேரக்டரில் சித்தார்த்தும், பிரியா கேரக்டரில் சுவாதியும் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலை இயக்குனர் தாய் செல்வம் இயக்கி வந்தார்.  சமீபத்தில் அவர் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். அதையடுத்து சீரியல் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

`

அண்ணன் காதலித்த பெண்ணை தம்பி திருமணம் செய்துகொள்ள, தம்பிக்குப் பார்த்த பெண்ணை அண்ணன் ஒரு இக்கட்டான சூழலால் திருமணம் செய்துகொள்வது போல இந்த சீரியல் சென்றுகொண்டிருந்தது.  தற்போது இருவரின் பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் கதை எடுத்து செல்லப்பட்டுள்ளது.

```
```

பரபரப்பாக பல டிவிஸ்ட்களோடு சென்று கொண்டிருந்த இந்த சீரியலின் இறுதி எபிசோட் சமீபத்தில் ஷூட் செய்யப்பட்டுள்ளது. அந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை படக்குழுவினர் இணையத்தில் பகிர அது வைரலாகி வருகிறது.

இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதால் அதை தொடர்ந்து பார்த்து வந்த ரசிகர்கள் இப்போது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். சமூகவலைதளங்களில் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.