தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லன், குணச்சித்திர வேடம் மற்றும் கௌரவ வேடம் என யார் வந்து கேட்டாலும் தேதிகளை கொடுத்து விடுவார்.
இப்போது தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட வில்லனாக நடிக்கும் படங்கள்தான் பெரிய அளவில் வெற்றி பெறுகின்றன. கதாநாயகனாக நடிக்கும் படங்களில் இவர் கூடுதல் அக்கறை காட்டி நடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடித்து முடித்து நீண்ட நாட்களாக அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இப்போது அந்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்துக்கு DSP என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
