Friday, January 9, 2026
Home > Cinema > முதல் முறையாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியோடு இணையும் விஜய் சேதுபதி!

முதல் முறையாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியோடு இணையும் விஜய் சேதுபதி!

இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லன், குணச்சித்திர வேடம் மற்றும் கௌரவ வேடம் என யார் வந்து கேட்டாலும் தேதிகளை கொடுத்து விடுவார்.

இப்போது தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட வில்லனாக நடிக்கும் படங்கள்தான் பெரிய அளவில் வெற்றி பெறுகின்றன. கதாநாயகனாக நடிக்கும் படங்களில் இவர் கூடுதல் அக்கறை காட்டி நடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில் காக்காமுட்டை, ஆண்டவன் கட்டளை மற்றும் கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியும் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்றுக்காக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.