Friday, August 21, 2026
Home > Cinema > இதற்கு முன் ஒரே நாளில் வெளியாகி மோதிக் கொண்ட விஜய் & அஜித் திரைப்படங்கள்!

இதற்கு முன் ஒரே நாளில் வெளியாகி மோதிக் கொண்ட விஜய் & அஜித் திரைப்படங்கள்!

அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றன.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரின் படங்களுக் ரிலீஸாகும் நாட்கள் தமிழகத்தில் திருவிழா போலதான் காட்சியளிக்கும். அதுவும் பண்டிகை நாட்களில் வெளியானால் சொல்லவே வேண்டாம். அப்படி இருக்க இருவரின் படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் ரிலீஸ் ஆனால்….

துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளன. இதுபற்றி பேசியுள்ள திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் ‘இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது உறுதியான தகவல்தான். துணிவு ஜனவரி 12 ஆம் தேதியும், வாரிசு ஜனவரி 13 ஆம் தேதியும் ரிலீஸாகும்” எனக் கூறியுள்ளார். இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்நிலையில் 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இவர்கள் இருவரின் படங்கள் இதற்கு முன்பும் சில முறை ஒரே நாளில் ரிலீஸாகியுள்ளன. 2001 ஆம் ஆண்டு முதல் முறையாக விஜய்யின் ஃப்ரண்ட்ஸ் படமும், அஜித்தின் தீனா படமும் பொங்கலுக்கு வெளியாகி இரண்டுமே வெற்றி பெற்றன. அடுத்து 2003 ஆம் ஆண்டு விஜய்யின் திருமலை, அஜித்தின் ஆஞ்சநேயா ஆகிய படங்கள் வெளியாக, இதில் திருமலை வெற்றி பெற்றது.

பின்னர் 2006 ஆம் ஆண்டிவில் பரமசிவன் மற்றும் ஆதி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. 2007 ஆம் ஆண்டு ஆழ்வார் மற்றும் போக்கிரி படங்கள் வெளியாகின. பின்னர் 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 2014 ஆம் ஆண்டில் ஜில்லா மற்றும் வீரம் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகின. அதன் பிறகு 8 ஆண்டுகள் கழித்து இப்போது துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.