Saturday, May 18, 2024
Home > Cinema > வாரிசு படத்தின் இரண்டு வெளிநாட்டு ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

வாரிசு படத்தின் இரண்டு வெளிநாட்டு ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் அதிக பட்ஜெட் கொண்ட படமாக வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தெலுங்கிலும் வார்சாடு என்ற பெயரில் உருவாகி வருகிறது.

`

இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் இன்னும் சில தினங்களில் முடியும் என்று சொலல்ப்படுகிறது. இதற்கிடையில் தீபாவளிக்கு முன்பாக இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அந்த பாடல் விஜய்யே பாடிய பாடல் என்று சொல்லப்படுகிறது.

```
```

தீபாவளியை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டர் வெளியான நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய மாஸ்டர் மற்றும் கோப்ரா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. லலித்தான் விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் ஜெர்மன் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் திரையரங்க ரிலீஸ் உரிமையை Tamil de Flimverleih என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.