Wednesday, May 1, 2024
Home > Cinema > வாரிசு திரைப்படம் மூலமாக கோலிவுட்டில் எண்ட்ரி கொடுக்கும் பிரபல ஆடியோ நிறுவனம்!

வாரிசு திரைப்படம் மூலமாக கோலிவுட்டில் எண்ட்ரி கொடுக்கும் பிரபல ஆடியோ நிறுவனம்!

விஜய் படங்களில் எப்போதும் பாடல்கள் ரசிகர்களைப் பெரியளவில் கவரும். அதனால் அவர் படங்களின் பாடல்களுக்கு எப்போதும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அந்தவகையில் வாரிசு படத்தின் பாடல்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு உரிமையை பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

`

நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் அதிக பட்ஜெட் கொண்ட படமாக வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தெலுங்கிலும் வார்சாடு என்ற பெயரில் உருவாகி வருகிறது.

```
```

இந்த படம் முதலில் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் இடையில் துணிவு திரைப்படமும் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது வாரிசு திரைப்படம் துணிவு படத்துக்கு முன்பாக ஜனவரி 11 ஆம் தேதியே ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.