Monday, May 20, 2024
Home > Cinema > வாரிசு இசை வெளியீடு… நாற்காலிகளை உடைத்த ரசிகர்கள் – தண்டம் கட்ட போகும் படக்குழு!

வாரிசு இசை வெளியீடு… நாற்காலிகளை உடைத்த ரசிகர்கள் – தண்டம் கட்ட போகும் படக்குழு!

விஜய் நடிக்கும் வாரிசு  படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் அதிக பட்ஜெட் கொண்ட படமாக வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

`

இந்நிலையில் நேற்று முன் தினம்இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 5000 விஜய் ரசிகர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்த நிலையில் அரங்கத்தில் ஏராளாம இருக்கைகள் உடைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

```
```

இதையடுத்து எவ்வளவு இருக்கைகள் சேதப்படுத்தப் பட்டுள்ளன என்பதை பொறுத்து, படக்குழுவிடம் அபராதம் வசூலிக்க உள்ளதாக அரங்க பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.