Tuesday, May 14, 2024
Home > Cinema > கேப்டன் நினைவிடத்துல பண்ற காரியமா இது?… டிடிஎஃப் வாசன் செயலால் கடுப்பான தேமுதிக நிர்வாகி!

கேப்டன் நினைவிடத்துல பண்ற காரியமா இது?… டிடிஎஃப் வாசன் செயலால் கடுப்பான தேமுதிக நிர்வாகி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

26ம் தேதி இரவு 9 மணிக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இன்று காலை அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் தற்போது (28/12/23) காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

கேப்டன் விஜயகாந்த்தாக மக்கள் மனதில் என்றும் நிலைத்து இருக்கும் ஒரு பிரபலம். சினிமாவில் எப்போதும் தனக்கு நாட்டின் மேல் உள்ள அக்கறையை காட்டிய வண்ணம் இருப்பார். அவரின் இறுதி ஊர்வலம் மக்கள் கடலுக்கு நடுவே நடந்தது. அவரின் உடல் தேமுதிக கட்சி அலுவலகம் உள்ள கோயம்பேட்டில் புதைக்கப்பட்டது.

`

இதையடுத்து அவரது மரணத்தில் அஞ்சலி செலுத்த முடியாமல் வெளிநாட்டில் இருந்த விஷால் சென்னை திரும்பியதும், கோயம்பேடு சென்று விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அங்கு அவரும் ஆர்யாவும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து பல சினிமா கலைஞர்கள் விஜயகாந்த் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

```
```

அந்தவகையில் மஞ்சள் வீரன் படக்குழுவினரான டிடிஎஃப் வாசன் மற்றும் இயக்குனர் செல்அம் ஆகியோர் நேற்று கோயம்பேடு விஜயகாந்த் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். அப்போது டிடிஎஃப் வாசனைப் பார்த்த சில ரசிகர்கள் அவரிடம் செல்ஃபி கேட்டனர். அவரும் எந்த இடத்துக்கு வந்திருக்கிறோம் என்பதை உணராமல் அவர்களோடு சிரித்துக் கொண்டே செல்ஃபி போஸ் கொடுத்தார்.

இதைப் பார்த்து கடுப்பான தேமுதிக நிர்வாகி ஒருவர் ”இது செல்ஃபி எடுக்குற இடமா? இங்கெல்லாம் இதை செய்யக் கூடாது. யாரா இருந்தாலும் அடிச்சுடுவேன்” என ஆத்திரமாக பேசி கூட்டத்தைக் கலைத்தார். அவரின் கோபத்தைக் கண்ட வாசன் & கோ அடித்து பிடித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு தெறித்து ஓடியுள்ளனர்.