Saturday, August 22, 2026
Home > Cinema > போர்…. ஆமா போர்… சமூகவலைதளங்களில் தொடங்கிய துணிவு vs வாரிசு விவாதங்கள்

போர்…. ஆமா போர்… சமூகவலைதளங்களில் தொடங்கிய துணிவு vs வாரிசு விவாதங்கள்

துணிவு படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்பதை உறுதி செய்துள்ளது தயாரிப்பு தரப்பு.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் அதுமாதிரி நடக்க வாய்ப்பில்லை என்று திரையுலகில் சில முக்கியப் புள்ளிகள் தெரிவித்து வந்தனர். ஆனால் இப்போது திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் ‘இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது உறுதியான தகவல்தான். துணிவு ஜனவரி 12 ஆம் தேதியும், வாரிசு ஜனவரி 13 ஆம் தேதியும் ரிலீஸாகும்” எனக் கூறியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் துணிவு அதிகாரப்பூர்வ ரிலீஸ் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும், பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட்டது. இந்நிலையில் இப்போது மீண்டும் அஜித், விஜய் ரசிகர்கள் துணிவு vs வாரிசு விவாதங்களைத் தொடங்கியுள்ளனர். இதற்கு முன்னர் ஒரே நாளில் ரிலீஸான விஜய் அஜித் படங்கள், அவற்றின் வெற்றி தோல்வி என சமூகவலைதளங்களில் விவாதங்கள் தொடங்கிவிட்டன.