Wednesday, April 15, 2026
Home > Cinema > இனிமே வெளிநாடுகளிலும் என் ராஜ்ஜியம்தான்… அமெரிக்காவில் வசூலில் முந்தும் துணிவு!

இனிமே வெளிநாடுகளிலும் என் ராஜ்ஜியம்தான்… அமெரிக்காவில் வசூலில் முந்தும் துணிவு!

வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள விஜய்யின் வாரிசு திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி மிகவும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. போட்டிக்கு வெளியான துணிவு திரைப்படம் நல்ல பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே ஒரு நாள் முடிந்துள்ள நிலையிலேயே படத்தை ப்ளாக்பஸ்டர் ஹிட் என வாரிசு படக்குழு அறிவித்துள்ளது.

இதே போல மறுபக்கத்தில் வெளியான துணிவு திரைப்படமும் சில எதிர்மறைக் கருத்துகளைப் பெற்றாலும், பெரும்பாலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதனால் ரிலீஸ் ஆனது முதல் துணிவு படத்துக்கு ஆதரவு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் முதல் நாள் முடிவில் இரண்டு படங்களும் தமிழ்நாட்டில் எவ்வளவு கலெக்‌ஷன் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. துணிவு திரைப்படம் 21 கோடி ரூபாய் அளவுக்கும், வாரிசு திரைப்படம் 20 கோடி ரூபாய் அளவுக்கும் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல இரண்டாம் நாளிலும் துணிவு வசூலே முந்தியுள்ளது.

இந்நிலையில் வழக்கமாக அஜித் திரைப்படங்கள் வெளிநாடுகளில் பெரிய வசூலை செய்யாது என்று சொல்லப்பட்டது. ஆனால் அதை முறியடித்து துணிவு திரைப்படம் அமெரிக்காவில் 2 நாட்களில் மட்டும் 4 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து பெரியளவில் முன்னேறி வருகிறது.