Monday, May 20, 2024
Home > Cinema > எத்தனை கிராபிக்ஸ் காட்சிகள்… படத்தை முடிக்க முடியுமா?… பரபர வேகத்தில் ஹெச் வினோத்

எத்தனை கிராபிக்ஸ் காட்சிகள்… படத்தை முடிக்க முடியுமா?… பரபர வேகத்தில் ஹெச் வினோத்

இயக்குனர் ஹெச் வினோத் தற்போது அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கி வருகிறார்.

பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் வலிமை படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றினர்.

`

இதையடுத்து மூன்றாவது படமாக இப்போது துணிவு படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த படம் சமீபத்தில் தாய்லாந்தில் இறுதிகட்ட ஷூட்டிங்கை முடித்துள்ளனர். அதையடுத்து படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மற்றும் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளன.

```
```

படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில் பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்குப் பிறகு போனி கபூர் தமிழில் படங்கள் தயாரிக்க போவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் அதை இருக்கும் குறுகிய நாட்களுக்குள் முடிக்க முடியுமா என்ற பதற்றத்தோடு அவர் வேலை செய்து வருகிறாராம். அதனால் துணிவு ரிலீஸ் கடைசிநேரம் வரை உறுதியில்லை என்று சொல்லப்படுகிறது.