Sunday, October 12, 2025
Home > Cinema > பரியேறும் பெருமாள் ஹீரோ கதிரின் மனைவி இவரா!! இதுரவை பார்த்திராத அரிய குடும்ப புகைப்படங்கள்!!

பரியேறும் பெருமாள் ஹீரோ கதிரின் மனைவி இவரா!! இதுரவை பார்த்திராத அரிய குடும்ப புகைப்படங்கள்!!

நடிகர் கதிர் இவர் 1992 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தவர். ஈரோட்டில் பிறந்த கதிர் அங்கு மிகவும் பிரபலமான BVB பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். நன்கு படித்த இவர் கோவை குமரகுரு கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் முடித்தார்.

Actor kathir with his wife sanjana

கதிர் முதல் முதலாக 2013 ஆம் ஆண்டு வெளியான மத யானை கூட்டம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அப்போது இவர் கல்லூரி படித்து கொண்டிருந்தார்.

Actor Kathir Sanjana Marriage Photos
Pariyerum perumal actor kathir

மாலை கல்லூரி முடித்த பின் ஷூட்டிங் செல்வார் கதிர். அந்த படத்தில் இயல்பான கிராமத்து இளைஞனாக நடித்து பலரது பாராட்டையும் பெற்றார். குறிப்பாக இவரது முகம் மற்றும் உருவம் இவரை அந்நிய படுத்தாமல். நம் நண்பன் , அண்ணன் , தம்பி , பக்கத்து வீட்டு பையன் போன்ற இயல்பான தோற்றத்தை கொடுப்பதால் இவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் இயல்பாக இருக்கின்றனர்.

Actor kathir with his mom

அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு கிருமி என்ற படத்தில் நடித்தார். அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு என்னோடு விளையாடு , விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

Atlee, Priya at Kathir Sanjana Marriage Photos

கதிர் சினிமா வாழ்கையில் மிக பெரிய திருப்பு முனை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேரும் பெருமாள் திரைப்படம் தான். அந்த அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது அந்த திரைப்படம்.

அதற்கு அடுத்த ஆண்டு 4 படங்களில் நடித்தார் அதிலும் குறிப்பாக விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்தார் கதிர். 2021 ஆம் ஆண்டு சர்பத் என்ற படத்திலும். 2022 ஆம் ஆண்டு ஒரு படத்தில் நடித்த கதிர் சுழல் என்ற வெப் தொடரில் நடித்தார்.

கதிர் 2018 ஆம் ஆண்டு சஞ்சனா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். சஞ்சனா ஈரோட்டில் பிரபல தொழில் அதிபரின் மகள் ஆவார். இவரது திருமணம் இரு குடும்பத்தார் , உற்றார் உறவினர்கள் , நண்பர்கள் சூழ பிரமாண்டமாக நடைபெற்றது.

கதிர் திருமணத்தில் சில சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர். நடிகர் கதிரின் திருமணம் மற்றும் குடும்ப புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.

Actor Kathir mom and dad