Thursday, June 4, 2026
Home > Cinema > நான் இமான் அண்ணாகிட்ட அந்த விஷயத்துக்காக மன்னிப்புக் கேட்கணும்… வைரல் ஆகும் சிவகார்த்திகேயன் த்ரோபேக் பேட்டி!

நான் இமான் அண்ணாகிட்ட அந்த விஷயத்துக்காக மன்னிப்புக் கேட்கணும்… வைரல் ஆகும் சிவகார்த்திகேயன் த்ரோபேக் பேட்டி!

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதனால் ஒவ்வொரு படத்துக்கும் அவரின் மார்க்கெட் மதிப்பு ஏறிக்கொண்டே வந்தது. இப்போது அவர் மாவீரன் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடனான ஒரு படம் என பிஸியாக இருக்கிறார்.

இதற்கிடையில் சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் நல்ல பையன் இமேஜைக் கெடுக்கும் விதமாக ஒரு தகவல் பரவியது. நடிகர் இமான் அளித்த ஒரு நேர்காணலில் பேசிய இமான் “சிவகார்த்திகேயன் எனக்கு நம்ப முடியாத மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். அவர் படங்களில் இனிமேல் நான் பணியாற்றவே மாட்டேன். அவரால்தான் என் குடும்பம் பிரிந்தது. என் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நான் மேலும் விரிவாக பேச விரும்பவில்லை” என்று கூறியிருந்தார்.

அவர் இப்படி பேசியதை வைத்து இமானின் முன்னாள் மனைவிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே முறை தவறிய உறவு இருந்ததாக கிசுகிசுக்கள் எழுந்தன. சினிமா பத்திரிக்கையாளர்கள் சிலர் கூட அதை உறுதிப்படுத்தி பேசினர். இதனால் சில மாதங்கள் பொது இடங்களில் தலைகாட்டாமல் இருந்தார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பழைய பேட்டி ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. அதில் சிவகார்த்திகேயன் “நான் யாரிடமாவது மன்னிப்புக் கேட்கவேண்டுமென்றால் அது இமான் அண்ணனிடம்தான். ஏனென்றால் நான் இப்போது பிசியாக இருப்பதால் அவரை பார்க்க முடியவில்லை. அதனால் அவர் என் மீது அப்செட்டில் இருக்கிறது. நாங்கள் எப்போதும் குடும்பமாக சென்றுதான் சாப்பிடுவோம். இப்போது நேரமில்லை.

நான் எப்போதும் அவரை அண்ணன் என்றுதான் அழைப்பேன். அவரும் என்னை தம்பி என்றுதான் அழைப்பார். எங்களுக்குள் சினிமா தாண்டிய உறவு இருக்கிறது. எங்களுக்குள் எந்த ஈகோவும் இல்லை. ஆனால் இப்போது அதிகமாக சந்திக்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.