Thursday, July 30, 2026
Home > Cinema > இளம் நடிகையை திருமணம் செய்கிறாரா சிம்பு… இரு வீட்டாரும் சம்மதம்!

இளம் நடிகையை திருமணம் செய்கிறாரா சிம்பு… இரு வீட்டாரும் சம்மதம்!

தமிழ் சினிமாவின் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிம்பு. 40 வயது நெருங்கிய சிம்பு இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிம்பு தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பல காதல்களையும், காதல் தோல்விகளையும் சந்தித்துள்ளார். தொடக்கத்தில் தன்னோடு வல்லவன் படத்தில் நடித்த நயன்தாராவை காதலிக்க, பின்னர் அந்த காதல் தோல்வியில் முடிந்தது.

பின்னர் வாலு படத்தில் நடித்த போது ஹன்சிகாவைக் காதலித்தார். ஆனால் அந்த காதலும் பின்னர் கைகூடாமல் போனது. இந்நிலையில் ஈஸ்வரன் படத்தில் தன்னோடு நடித்த நிதி அகர்வாலை இப்போது டேட்டிங் செய்வதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த சித்தி இத்னானியை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் கல்யாணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த திருமணத்துக்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து இரு தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.