Thursday, March 28, 2024
Home > Cinema > பிரின்ஸ் vs சர்தார்… முதல் நாளில் ரசிகர்களைக் கவர்ந்தவர் யார்?

பிரின்ஸ் vs சர்தார்… முதல் நாளில் ரசிகர்களைக் கவர்ந்தவர் யார்?

நேற்று வெளியான சர்தார் மற்றும் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.

`

தீபாவளியை முன்னிட்டு இந்த ஆண்டு பிரின்ஸ் மற்றும் சர்தார் ஆகிய திரைப்படங்கள் மூன்று நாட்கள் முன்னதாகவே ரிலீஸ் ஆகியுள்ளன. இந்நிலையில் இரு படங்களுமே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றன.

```
```

காதல் மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்களுக்கு எந்தவித திருப்தியையும் கொடுக்கவில்லை. நகைச்சுவைக் காட்சிகள் சுத்தமாக சிரிப்பை வரவழைக்கவில்லை என்று ரசிகர்கள் விமர்சனம் வைத்துள்ளனர்.

மறுபக்கம் சர்தார் திரைப்படம் ஒரு நல்ல கருத்தை சொல்வதாக அமைந்தாலும், திரைக்கதை கிரிப்பாக இல்லை என்றும், வழக்கமான பாணியிலேயே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் விமர்சனங்களை வைத்துள்ளன. ஆனால் ப்ரின்ஸ் படம் ஒட்டுமொத்தமாக சர்தார் திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெறவில்லை என்பது அந்த படத்துக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.