நடிகை சமந்தா தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட்டிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. அவர் நடித்த பல படங்கள் பெரிய அளவில் ஹிட்டான நிலையில் தன்னுடைய சக நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமணம் சில ஆண்டுகளிலேயே முறிந்தது. இருவரும் விவாகரத்து செய்து இப்போது தங்கள் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

விவாகரத்துக்கு பின்னர் சமந்தாவின் மார்க்கெட் தென்னிந்தியாவைத் தாண்டியும் பாலிவுட் வரை சென்றது. இப்போது அவர் பாலிவுட்டில் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது தவிர யசோதா மற்றும் ஷகுந்தலம் உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து முடித்து அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் தன்னுடைய புகைப்படங்கள் எதையும் சமூகவலைதளங்களில் பகிரவில்லை. அதனால் வருக்கு தோல் சம்மந்தமான அலர்ஜி பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சமந்தா தன்னுடைய புதிய புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.



