Sunday, May 19, 2024
Home > Cinema > ஒரே இடத்தில் நடக்கும் துணிவு- ஜெயிலர் ஷூட்டிங்…. ரஜினி & அஜித் சந்திப்பு நடக்குமா?

ஒரே இடத்தில் நடக்கும் துணிவு- ஜெயிலர் ஷூட்டிங்…. ரஜினி & அஜித் சந்திப்பு நடக்குமா?

அண்ணாத்த படத்தின் தோல்விக்குப் பிறகு ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகு இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

`

வரிசையாக ரஜினி படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அதுபோல ரஜினியின் சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

```
```

இப்போது விறுவிறுப்பாக ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதுவரையில் 50 சதவீதத்துக்கும் மேலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தளவுக்கு வேகமாக நெல்சன் காட்சிகளை படமாக்க, படக்குழுவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறாராம் ரஜினி.

இப்போது சென்னையின் கோகுலம் ஸ்டுடியோவில் ஜெயிலர் ஷூட்டிங் நடந்து வருகிறது. அதே ஸ்டுடியோவில்தான் அஜித்தின் துணிவு ஷூட்டிங்கும் நடந்து வருகிறது. இதனால் இருவரும் சந்தித்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.