Friday, April 17, 2026
Home > Cinema > தன்னுடைய பிறப்புறுப்பில் ஏற்பட்ட மாற்றம்.. இது தான் காரணம்..!ஷூட்டிங் கொடுமைகள் பற்றி பேசிய ராதிகா ப்ரீத்தி!

தன்னுடைய பிறப்புறுப்பில் ஏற்பட்ட மாற்றம்.. இது தான் காரணம்..!ஷூட்டிங் கொடுமைகள் பற்றி பேசிய ராதிகா ப்ரீத்தி!

பிரபல சன் தொலைக்காட்சியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வருகிறது பூவே உனக்காக சீரியல்.இதில் கதிர் ஹீரோவாக மற்றும் ஹீரோயினாக பூவரசி இவர்கள் நடித்து வருகிறார்கள்.இந்த கதாபாத்திரங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ‌ இதில் கதாநாயகியாக நடிக்கும் பூவரசியின் உண்மையான பெயர் ராதிகா ப்ரீத்தி.இவர் இந்த சீரியல் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இவர் 1997 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கேஜிஎஃப் என்ற ஊரில் பிறந்தார். இவர் தேசிய அளவிலான த்ரோ பால் விளையாட்டு வீரர். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது திரைத்திரையில் நடிகை ஆக வேண்டும் என்று தோன்றியதாம். இதைத்தொடர்ந்து இவருக்கு கன்னட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சில காரணத்தினால் திரைப்படம் பாதிலேயே கைவிடப்பட்டது. இதனால் இவர் சீரியல் பக்கம் நுழைந்தார்.

இவர் தமிழில் எம்பிரன் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இந்த படங்கள் இவர் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வி அடைந்தது.இதைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான ராஜா லவ்ஸ் ராதே என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அதே ஆண்டு கன்னட சினிமாவில் அடி ஒக இடிலே என்ற படத்திலும் நடித்து வந்துள்ளார்.இதனால் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.இவர் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நடித்து வந்த பூவே உனக்காக சீரியலில் இருந்து திடீரென விலகினார். அதுகுறித்து இப்போது அவர் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் பேசிய அவர் “கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் எனக்கு சம்பளமே கொடுக்காமல் நடிக்க வைத்தார்கள்.அந்த சீரியல் ஒளிபரப்பான பிறகு தான் நமக்கு பணம் வரும் அதுவரை காத்திருக்க வேண்டும் என்று கூறினார்கள்.அந்த சீரியலில் எனக்கு ஒழுங்காக சம்பளம் தரவேயில்லை. அவ்வப்போது 10000 என தருவார்கள்.

படப்பிடிப்புக்கு ஒரு ஃபார்ச்சூனர் காரில் 10 பேரை ஏற்றிக்கொண்டு போவார்கள். சில நாட்களில் 07:30 மணிக்கு ஷூட்டிங் இருக்கிறது என்று கூறி வர சொல்லுவார்கள். சரி என்று போனால் அங்கே கேட்டை திறப்பது நாமாகத்தான் இருக்கும்.

சரி படப்பிடிப்பின் போது சிறுநீர் கழிக்கலாம் என்றால் ஆண்கள் பெண்கள் என இருவருக்கும் ஒரே கழிவறை தான். இதிலும் கொடுமை என்னவென்றால் சிறுநீர் கழிக்க செல்லும் பொழுது பள்ளி குழந்தைகள் இயக்குனரிடம் அனுமதி வாங்க வேண்டும். சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறினால் எவ்வளவு நேரம் ஆகும் என்று மைக்கில் அனைவரும் காது படும்படி கேட்பார். இது போன்ற தர்ம சங்கடமான சூழ்நிலைகள் எல்லாம் நான் அனுபவித்திருக்கிறேன்.

ஒரு வீட்டில் ஷூட்டிங் நடந்த போது ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒரே கழிப்பறையைப் பயன்படுத்தினோம். அதனால் எனக்கு பிறப்புறுப்பில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. இதுகுறித்து மருத்துவரிடம் பரிசோதித்த போது எனக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்று சொன்னார்கள். பொது கழிப்பறையைப் பயன்படுத்தியதால்தான் இது ஏற்பட்டது” எனக் கூறியுள்ளார்.