Saturday, April 18, 2026
Home > Cinema > ப்ரா சைஸ் கேட்ட ரசிகர்… உன் வாழ்க்கையில் பெண்களின் டிஷர்ட்டை ஜூம் பண்ணி பாரு.. தக்லைஃப் பதில் கொடுத்த பிரியா பவானி சங்கர்!

ப்ரா சைஸ் கேட்ட ரசிகர்… உன் வாழ்க்கையில் பெண்களின் டிஷர்ட்டை ஜூம் பண்ணி பாரு.. தக்லைஃப் பதில் கொடுத்த பிரியா பவானி சங்கர்!

நடிகை பிரியா பவானி சங்கர் 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபோ நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரையில் நடிகையாக இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஹீரோயினாக வெற்றி பெற்றார்.

இவர் 1989 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார்.இவர் முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஹீரோயினாக நடித்தார். பின்னர் மேயாத மான் படத்தில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், மாயா போன்ற படங்களில் நடித்தார்.

சின்னத்திரை நடிகைகளுக்கு சினிமா கதவுகள் அவ்வளவு எளிதாக திறக்காது. ஆனால் சமீபகாலத்தில் அந்த மாய பிம்பம் உடைந்து வருகிறது. அதை முதலில் உடைத்தவர் பிரியா பவானி சங்கர். விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்த அவர் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர்.

சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இப்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரளாகி உள்ளது. பொதுவாக ஹோம்லியான லுக்கிலேயே தனது புகைப்படங்களை இவர் பகிர்ந்து வருகிறார்.

அதுபோல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரசிகர்களோடு உரையாடியும் வருகிறார். அப்படி ஒருமுறை அவர் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த போது ஒரு மர்ம நபர் “உங்களின் ப்ரா சைஸ் என்ன ?” என அத்துமீறிக் கேட்டார். அதற்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர் “உன் வாழ்க்கையில் உன் கூட இருக்கும் பெண்களுக்கு இருப்பதுதான் எனக்கும் இருக்கிறது. உனக்கு சைஸ் தெரியவேண்டுமென்றால் உன் வாழ்க்கையில் இருக்கும் பெண்களின் டிஷர்ட்டை ஜூம் பண்ணி பாரு” எனக் கோபாவேசமாக பதிலளித்தார்.

அதுபற்றி பின்னர் ஒரு நேர்காணலில் பேசும்போது “அவருக்கு அப்படி பதிலளித்தால் அது சர்ச்சையாகும் என்று தெரிந்துதான் அப்படி பதிலளித்தேன்” எனக் கூறியுள்ளார்.